தினகரனை அ.தி.மு.க. தொண்டர்களும், தொகுதி மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
தினகரனை அ.தி.மு.க. தொண்டர்களும், தொகுதி மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்…
The short URL of the present article is: http://parivu.tv/5tsbi
Share
  • ஆர்.கே.நகரில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. தொண்டர்களும், தொகுதி மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
  • கிருஷ்ணகிரியில் இன்று பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்துக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
  • சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
  • அவரை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த தொகுதி மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
  • தி.மு.க. வேட்பாளராக பலம் வாய்ந்த நபரை அறிவிக்காமல் ஏதோ பெயருக்கு ஒரு வேட்பாளரை அறிவித்து இருக்கிறார்கள். 
  • இந்த தேர்தலில் தி.மு.க. ஆர்வம் காட்டவில்லை என்பது போல தெரிகிறது. இடைத்தேர்தல் வி‌ஷயத்தில் தி.மு.க.வின் செயல்பாடு சந்தேகமாக இருக்கிறது.
  • ஆர்.கே.நகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும். வடமாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது போல இந்த இடைத்தேர்தலிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும்.
  • மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாரதிய ஜனதா முயற்சி எடுக்கும்.

—————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *