திரிஷாவுக்கு எதிராக கண்டனம்: ‘பீட்டா’ அமைப்பில் இருக்கும் திரிஷாவுக்கு எதிராக சுவரொட்டி விளம்பரங்கள்.. சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு..

By / 2 years ago / Cinema, NEWS, Tamil Nadu / No Comments
திரிஷாவுக்கு எதிராக  கண்டனம்: ‘பீட்டா’ அமைப்பில் இருக்கும் திரிஷாவுக்கு எதிராக சுவரொட்டி விளம்பரங்கள்.. சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு..
The short URL of the present article is: http://parivu.tv/F4Z24
Share
  • ஜல்லிக்கட்டுக்கு கோர்ட்டில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான ‘பீட்டா’வில் நடிகை திரிஷா முக்கிய அங்கத்தினராக இருந்து பிராணிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். சென்னையில் தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தபோது அதை கண்டித்தார்.
  • மாடியில் இருந்து ஒரு இளைஞர் நாயை கீழே தூக்கி வீசுவது போன்று சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவை பார்த்து ஆவேசப்பட்டு டுவிட்டரில் கருத்து வெளியிட்டார். ஏற்கனவே படப்பிடிப்புக்காக பெங்களூருவில் காரில் சென்று கொண்டு இருந்தபோது ரோட்டோரம் அடிபட்டு கிடந்த நாய்க்குட்டியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போய் சிகிச்சை அளித்து தனது வீட்டிலேயே வளர்த்தார்.
  • சென்னையில் தெருவோரம் திரியும் நாய்களை பிடித்து குளிப்பாட்டி வளர்த்து தத்து கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார். பிராணிகளுக்காக தனியாக பாதுகாப்பு இல்லம் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளார். பிராணிகள் மீது திரிஷா காட்டும் இந்த தீவிரத்தை பார்த்துத்தான் பீட்டா அமைப்பினர் அவரை அணுகி அதன் தூதுவராக ஆக்கி விலங்குகள் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தினர்.
  • ‘பீட்டா’வில் சேர்ந்த பிறகு திரிஷா இன்னும் வேகமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா செயல்படுவது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பீட்டாவுக்கு எதிராக இளைஞர்களும், மாணவர்களும் போராடுவதுடன் அந்த அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.
  • நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன்,சூர்யா, சிம்பு, விவேக் உள்ளிட்ட திரையுலகினர் பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் அதன்மீதான தடையை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
  • ஆனால் ‘பீட்டா’ அமைப்பில் இருக்கும் திரிஷா இந்த பிரச்சினையில் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ‘பீட்டா’ அமைப்பில் இருந்து வெளியேறும்படி அவரை வற்புறுத்துவதற்கும் பதில் அளிக்க வில்லை.
  • இதனால் திரிஷா மீது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தமிழ் அமைப்பினரும் ஆத்திரம் அடைந்து உள்ளனர். அவர்கள் திரிஷாவை கண்டித்து டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் படங்கள் மூலம் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள். திரிஷாவுக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த சுவரொட்டியும் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

———————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *