துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி

By / 4 months ago / NEWS, parivu / No Comments
துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி
The short URL of the present article is: http://parivu.tv/kTfMh
Share

டில்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய அரசுக்கா, துணைநிலை கவர்னருக்கா அல்லது முதல்வருக்கா என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

டில்லியில் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் என டில்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பளித்துள்ளது. இதில், அரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.

கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மீது துணைநிலை கவர்னர் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் நல திட்டங்கள் துணைநிலை கவர்னரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் இருவருமே பொறுப்பு. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்தது. எல்லா முடிவுகளுக்கும் அமைச்சரவை துணைநிலை கவர்னரின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *