நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி சட்டத்திற்கு பிரணாப் ஒப்புதல் : ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்

The short URL of the present article is: http://parivu.tv/D8KpM
- நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி-யின் 4 துணை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
- நாடாளுமன்றத்தில் துணை மசோதாக்கள் நிறைவேறியதை அடுத்து ஜி.எஸ்.டி சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
- மத்திய சரக்கு-சேவை வரி மசோதா சி.ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா ஐ.ஜி.எஸ்.டி., யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா யு.டி.ஜி.எஸ்.டி. மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
- இந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. சட்டம் அமலுக்கு வருகிறது.
- முன்னதாக நாட்டில் பொருட்கள் மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் பல வகைகளில் மறைமுக வரி விதிப்பு செய்கின்றன.
- இந்த வரிவிகிதம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமாக வேறுபடுகிறது. மத்திய, மாநில அரசுகளின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக, சரக்கு மற்றும் சேவை வரி Goods and Services Tax என்ற பெயரில் வரி விதிக்க கடந்த 2000-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசில் முதன் முதலாக திட்டமிடப்பட்டது.
- இந்த வரி விதிப்பால் மாநில அரசுகளின் வரி வருவாயில் கடும் இழப்பு ஏற்படும் என்பதால், மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதனையடுத்து மாநில நிதி அமைச்சர்களின் குழு உருவாக்கப்பட்டு ஜி.எஸ்.டி பற்றி ஆலோசிக்கப்பட்டது.
- மாநில அரசுகள் தெரிவித்த பரிந்துரைப்படி ஜி.எஸ்.டி. சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பின் கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த நிலையில் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஆலோசித்த மத்திய அமைச்சரவை, கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- பின்னர் பல கட்ட விவாதங்களுக்கு பிறகு மாதம் 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த துணை மசோதாக்கள் நிறைவேறின.
- ஜி.எஸ்.டி.யில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a comment