நாடு முழுவதும் நாளை குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம்…

By / 2 years ago / India, NEWS / No Comments
நாடு முழுவதும் நாளை குடியரசுதின விழா கோலாகலமாக  கொண்டாடப்பட உள்ளது: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம்…
The short URL of the present article is: http://parivu.tv/8tok3
Share
  • நாடு முழுவதும் நாளை குடியரசுதின விழா கோலாகலமாக நாளை கொண்டாடப்பட உள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் மக்கள் கூடும் இடங்கள், விமானநிலையங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • குடியரசு தினத்தையொட்டி நாளை தலைநகர் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
  • இதனையடுத்து தலைநகர் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
  • இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினரை உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானியர்களை போன்று உடையணிந்தும், ஆப்கானிஸ்தான் நாட்டின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தியும் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே இந்த சதி திட்டத்தோடு ஊடுருவியுள்ள சில தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தானியர்களுக்கான அடையாள அடையாள அட்டைகளையும் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆப்கானிஸ்தான் அடையாள அட்டை வைத்திருப்பவர்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

———————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *