நிதி நிலைமை வலிமை அடைந்தால் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு: மத்திய அரசு உறுதி…

By / 5 months ago / India, NEWS, parivu / No Comments
நிதி நிலைமை வலிமை அடைந்தால் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு: மத்திய அரசு உறுதி…
The short URL of the present article is: http://parivu.tv/jPA5k
Share

நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அரசு கூறுகையில், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தால் கூட அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்றும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு இல்லை என்று தெரிவித்துள்ளது.

வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். அதன்மூலம், வரி வருவாய் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உற்பத்தி வரியை குறைக்க முடியும் என்று கூறியுள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே ரூ.98,000 கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80,000 கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது.

அதனால்தான், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

எனவே பொதுமக்கள் தாங்களுக்கு ஏற்ப பெட்ரோலுக்கு, உரிய விலையை கொடுத்துத்தான் ஆக வேண்ட நிலை உள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் ‘வாட்’ வரி விதிக்கின்றது. மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன.

இருந்தாலும், மாநில அரசுகளும் ‘வாட்’ வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை. தற்போது ராஜஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து, லிட்டருக்கு ரூ.4 குறைத்துள்ளது. அதைபோல் ஆந்திர மாநிலத்திலும் வாட் வரி குறைக்கப்பட்டு, லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது.

—————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *