நீட் தேர்வின் போது மாணவிகளிடம் வரம்பு மீறிய அதிகாரிகள்: விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவு…

By / 2 years ago / Tamil Nadu / No Comments
நீட் தேர்வின் போது மாணவிகளிடம் வரம்பு மீறிய அதிகாரிகள்: விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவு…
The short URL of the present article is: http://parivu.tv/Schp0
Share
  • நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளிடம் வரம்பு மீறயதை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • நீட் எனப்படும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடைபெற்றது.
  • இதில் பங்கேற்க வந்த மாணவிகளிடம் ஆடை கட்டுப்பாடு உள்ளிட்ட கெடுபிடிகள் காட்டப்பட்டன. சேலை, பைஜாமா, கூர்தா, வளையல், கிளிப், கம்மல், நகை, கடிகாரம் போன்றவை அணிந்து வர மத்திய கல்வி வாரியம் தடை விதித்திருந்தது.
  • இதனால் நகைகளை அணிந்து வந்த மாணவிகள் பதற்றத்துடன் அவற்றை கழற்றி கொடுத்துவிட்டு மனஉழைச்சலுடன் தேர்வறைக்கு சென்றனர்.
  • மத்திய கல்வி வாரியத்தின் கெடுபிடிகளுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
  • ஏறக்குறைய தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை போன்ற சோதனையை அதிகாரிகள் மாணவ, மாணவிகளிடம் காட்டினர்.
  • உச்சகட்டமாக கேரள மாநிலம் கன்னூர் மாநிலத்தில் மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றக்கூறியது நாடு முழுவதும் அதிர்வைளைகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அது குறித்து முழுமையான விசாரணையை நடத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
  • விதிமுறை என்ற பெயரில் மாணவிகளிடம் வரம்பு மீறி நடப்பதை ஏற்க முடியாது என்றும் அந்த ஆணையம் கண்டித்துள்ளது.

————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *