நீதிமன்றம் எனக்கு கோயில் போன்றது: பிரிவு உபசரிப்பு விழாவில் இந்திரா பானர்ஜி பேச்சு…

By / 2 weeks ago / India, NEWS, Politics, Tamil Nadu / No Comments
நீதிமன்றம் எனக்கு கோயில் போன்றது: பிரிவு உபசரிப்பு விழாவில் இந்திரா பானர்ஜி பேச்சு…
The short URL of the present article is: http://parivu.tv/0TV5S
Share

தான் தனிப்பட்ட கோரிக்கைகளை யாரிடமும் இதுவரை வைத்தது இல்லை என்று நீதிபதி இந்திரா பானர்ஜி பிரிவு உபசரிப்பு விழாவில் பேசினார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்க உள்ளார். எனினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் பணிகள் எதுவும் தாமதமாக கூடாது என்று அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சக்திவேலுக்கு தனது நன்றி என இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

எந்த அச்சமும், யாருக்கும் அடிபணியாமலும் கடமையை செய்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் எனக்கு கோயில் போன்றது என்று நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

கோயில் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படிதான் நானும் செயல்பட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களிலேயே மிகச்சிறந்தது சென்னை உயர்நீதிமன்றம் தான் என்று இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

பாரம்பரிய கலாச்சாரங்களை கொண்ட தமிழகத்தில் மக்கள் எளிமையானவர்களாக உள்ளனர் என்றும் தமிழக மக்கள் பாரம்பரியத்தையும், மத நம்பிக்கையையும் பின்பற்றி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

சில தீர்ப்புகளை என்னால் இன்றும் வழங்க முடியாமல் போனது என்றும் சென்னை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

———————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *