நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

By / 1 year ago / Business, India, NEWS, Tamil Nadu / No Comments
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…
The short URL of the present article is: http://parivu.tv/mMgyt
Share
  • பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
  • இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 
  • இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. 
  • விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் சம்மேளனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றம் செய்துள்ளது நிரூபணம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் வரும் ஜூலை 10 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

——————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *