நைஜீரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: இந்திய தூதருக்கு நைஜீரியா சம்மன்…

By / 2 years ago / India, NEWS, World / No Comments
நைஜீரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: இந்திய தூதருக்கு நைஜீரியா சம்மன்…
The short URL of the present article is: http://parivu.tv/Y0T8n
Share
 • நைஜீரிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இந்தியா தூதரை நேரில் வரவழைத்து நைஜீரியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
 • கடந்த 27-ம் தேதி டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
 • இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தூதருக்கு நைஜீரியா சம்மன் அனுப்பியது.
 • இது தொடர்பாக நைஜீரியா தலைநகர் லாகோஸில் உள்ள ஊடகங்களில் வெளியான செய்திகளில், "இந்தியாவில் தொடர்ந்து நைஜீரியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
 • கடைசியாக கடந்த 27-ம் தேதி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய தூதரிடம் வலியுறுத்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 • நைஜீரியாவுக்கான இந்திய தூதர் நாகபூஷண ரெட்டிக்கு நைஜீரிய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
 • இதனை ஏற்று தூதரக அலுவலகத்துக்கு வந்த நாகபூஷண ரெட்டியிடம் நைஜீரிய வெளியுறவுத் துறை மூத்த அமைச்சர் ஒலுசோலா, "போதைப் பழக்கத்தால் இந்திய இளைஞர் உயிரிழந்ததற்கு எந்த வகையில் தாக்குதலுக்குள்ளான நைஜீரிய இளைஞர்கள் காரணமாக முடியும்.
 • கிரேட்டர் நொய்டா சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.
 • கல்வி கற்க இந்தியா செல்லும் நைஜீரிய மாணவர்கள் இனியும் இதுபோல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இத்தகைய அழுத்தத்தை தருகிறோம்.
 • உங்கள் அரசாங்கத்திடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துங்கள்" எனக் கூறியுள்ளார்.
 • இதற்கு பதிலளித்த இந்திய தூதர், "நைஜீரிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு தனது கண்டனத்தை ஏற்கெனவே பதிவு செய்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.
 • கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு மீண்டும் ஆப்பிரிக்கர்கள் மீது இந்தியாவில் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

——————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *