பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வுக்காக 9-ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம் …

By / 2 years ago / India, NEWS / No Comments
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வுக்காக 9-ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம் …
The short URL of the present article is: http://parivu.tv/qbTNW
Share
  • பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வுக்காக நாடாளுமன்றம் வரும் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கூடியது.
  • அப்போது நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
  • அதே நாளில் நாடாளுமன்ற ஆய்வறிக்கையும், அடுத்த நாளில் மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை வரும் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது. 
  • அப்போது கேரளாவில் பா.ஜ.க-வினர் மற்றும் RSS அமைப்பினர் மீதான தாக்குதல் குறித்த பிரச்சனை எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உள்துறை, ரயில்வே, நிலக்கரி, விவசாயம் ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் என தெரிகிறது.
  • மேலும் சரக்கு மற்றும் சேவை வரி துணை சட்ட மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்.
  • மக்களவையில் தனி நபர் மசோதா பிரிவில் பாரதிய ஜனதா எம்.பி நிஷிகாந்த் துபே மசோதா ஒன்றை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.
  • மசோதாவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் ஆகிய பகுதிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது.
  • இதே போன்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தனி நபரை கட்டுப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
  • நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *