பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது .

By / 1 week ago / India, NEWS, parivu / No Comments
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது .
The short URL of the present article is: http://parivu.tv/yibCX
Share

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்திருப்பதால், அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

சத்தியமங்கலம் அருகே உள்ள இந்த அணையின் மூலம், ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கருர் மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், கடந்த மாதம் 14-ஆம் தேதியன்று அணை முழு கொள்ளளவான 102 அடியை எட்டியது. இதையடுத்து, பவானி ஆற்றில் அதிகபட்சமாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர் நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணக்கு வினாடிக்கு 743 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.76 அடியாக சரிந்துள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாயிரத்து 300 கனஅடியும், பவானி ஆற்றில் 650 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *