பாதுகாவலர்களால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார் : ராஜஸ்தானில் பசு பாதுகாவலர்களால் ஒருவர் கொடூரமான முறையில் தரையில் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார்…

By / 2 years ago / India, NEWS, Politics / No Comments
பாதுகாவலர்களால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார் :  ராஜஸ்தானில் பசு பாதுகாவலர்களால் ஒருவர் கொடூரமான முறையில் தரையில் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார்…
The short URL of the present article is: http://parivu.tv/9hwQi
Share

 


  • ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசுக்களை ஏற்றிசென்றதாக 5 பேரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கும்பலால் ஒருவர் கொடூரமான முறையில் தரையில் அடிக்கப்படுகிறார், அவர் அதில் சுயநினைவை இழக்கிறார். 
  • தாக்கப்பட்டவர்களில் ஒருவரான பெக்லு கான் (வயது 55) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் தாக்கப்பட்ட மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநில உள்துறை மந்திரி குலாப் சாந்த் காதாரியா பேசுகையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக தாக்கிய கொடூரக் கும்பலை பாதுகாக்கும் விதமாக அவர்கள் (பசு பாதுகாவலர்கள்) என கூறிஉள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை இச்சம்பவத்திற்கு குற்றம் சாட்டிஉள்ளார்.
  • ஜெய்பூர் சந்தையில் பசுக்களை வாங்கி வருவதாக அரியான மாநிலத்தை சேர்ந்த பெக்லு கான் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஆவணங்களை கும்பலிடம் காட்டிஉள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத அந்த கும்பல் அவர்களை கொடூரமான முறையில் தாக்கி உள்ளது. நெடுஞ்சாலையில் ஐவரையும் அக்கும்பல் வெளியே இழுத்து வந்து உள்ளது, கொடூரமான முறையில் அடித்து தாக்கி உள்ளது. இதனை உள்ளூர் மக்கள் வீடியோ எடுத்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாநில பா.ஜனதா அரசு மீது கடும் விமர்சனம் எழுந்து உள்ளது. வீடியோ சமூக வலைதளங்களில் கண்டனங்களுடன் வைரலாக பரவி வருகிறது.
  • இந்நிலையில் இருதரப்பு இடையேயும் தவறு உள்ளது. பசுக்களை கடத்துதல் என்பது சட்டவிரோதமானது என மக்களுக்கு தெரியும் எனவே அதனை செய்து உள்ளனர். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பசு பாதுகாவலர்கள் தடுக்கின்றனர். இருப்பினும் சட்டத்தினை தனிநபர் கையில் எடுத்துக் கொள்வது தவறானது, இருதரப்பு மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மாநில உள்துறை மந்திரி கூறிஉள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் 10 பேரை கைது செய்து உள்ளதாக கூறிஉள்ளது. 
  • பா.ஜனதா ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களில் பசு வதைக்கு எதிரான நடவடிக்கையை அடுத்து பசு பாதுகாப்பு தொடர்ந்து செய்தியாகி வருகிறது.

————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *