பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமி புகைப்படத்தை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிட உச்ச நீதிமன்றம் தடை…

By / 4 months ago / NEWS, parivu / No Comments
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமி புகைப்படத்தை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிட உச்ச நீதிமன்றம் தடை…
The short URL of the present article is: http://parivu.tv/OFelC
Share

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமி புகைப்படத்தை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் பாதிக்கப்படும் சிறுமிகளின் முகத்தை மறைத்துக் கூட தொலைகாட்சி, பத்திரிகையில் காட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

மேலும் சிலர் சிறுமிகளை கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மேலும் சிறுமிகளின் படத்தை மறைத்து கூட வெளியிட கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

———————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *