பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு…

By / 2 years ago / Cinema, NEWS, Tamil Nadu / No Comments
பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு…
The short URL of the present article is: http://parivu.tv/XqEbA
Share
  • பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன்படி பிப்ரவரி 5-ம் தேதியன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் 400 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரிலும், அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை காரணமாக அப்போட்டிகள் நடைபெறாமல் இருந்தன.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நடைபெற்ற தன்னெழுச்சி அறவழிப் போராட்டங்களை கண்டு அதிர்ந்த மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டன.
  • மாநில அரசு சார்பில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இரண்டே நாளில் நேற்று அது நிரந்தர சட்டமாக்கப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை மெரினாவில் போராடும் ஒரு சில இளைஞர்களை தவிர தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்கள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

—————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *