பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மத்திய அரசிற்கு எந்த பங்கும் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்…

By / 3 months ago / India, NEWS, parivu / No Comments
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மத்திய அரசிற்கு எந்த பங்கும் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்…
The short URL of the present article is: http://parivu.tv/txGua
Share

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றன.

போராட்டத்தால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் நடந்த கண்டன போராட்டத்தில் 22 எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளன.

போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஏழை, நடுத்தர மக்களின் நலனை புறக்கணித்து பணக்காரர்களுக்கு மத்திய அரசு உதவுகிறது என குற்றம் சாட்டினார்.

இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்துவிட்ட நிலையிலும் பிரதமர் மோடி மவுனமாக உள்ளார் என்று கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மத்திய அரசிற்கு எந்த பங்கும் இல்லை என்றும், விலை உயர்விற்கு மத்திய அரசு காரணமல்ல என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவில் பிரதமர் மவுனம் காப்பதாக குற்றம்சாட்டும் ராகுல், பீகாரின் ஜெகனாபாத் பகுதியில் மருத்துவமனைக்கு 2 வயது சிறுமியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை போராட்டக்காரர்கள் மறித்ததால் உயிரிழந்துள்ளதற்கு பதில் சொல்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நாட்டில் அச்சம் மிகுந்த சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது என்றும் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசு பொறுப்பல்ல என ரவிசங்கர் பிரசாத் கூறியது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என்று குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள் என்று கூறியுள்ள அவர், பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் கச்சா எண்ணெய் விலை ரூ.107ஆக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்ததாகவும், தற்போது கச்சா எண்ணெய் விலை ரூ.78 ஆக இருக்கும் போது விலை உயர்வு ஏன் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

———————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *