பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 காசுகள் குறைப்பு : அருண் ஜெட்லி அறிவிப்பு…

பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 காசுகள் குறைத்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இன்று காலை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி; பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 காசுகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் தினசரி நிர்ணயிக்கப்படும் என்று கூறினார்.
மத்திய கலால் வரி ரூ.1.50 குறைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 இழப்பை ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அருண் ஜெட்லி விளக்கம் :
கலால் வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.21,000 கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ள நிலையில் மாநில அரசும் விற்பனை வரியை குறைக்க கேட்டுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.
மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 86 டாலராக உள்ளது.
வங்கிக் கடன் வட்டி விகிதத்தை அமெரிக்கா அதிகரித்துவிட்டது. ஆகையால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
பங்குச்சந்தை சரிவு :
திடீர் பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 806 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 259 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.
———————————————————————————————————————————————————————————————————————
Leave a comment