பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

By / 2 weeks ago / NEWS, parivu, Tamil Nadu / No Comments
பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
The short URL of the present article is: http://parivu.tv/atDnC
Share

பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தெய்துள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்பியாக உள்ள ஒரு பெண் அதிகாரியை அதே துறையில் பணியாற்றும் ஐஜி ஒருவர் அடிக்கடி தனது அறைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி முடித்ததும், ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

பின்னர் அதிகாரி எழுந்து செல்லும்போது பின்னால் இருந்து செல்போனில் படம் எடுத்து வந்துள்ளார்.

கேட்டால், நீங்கள் அழகாக சேலை கட்டியுள்ளீர்கள். அதை என் மனைவிக்கும் எடுத்து கொடுக்கப் போகிறேன் என்று இரட்டை அர்த்த வசனங்களில் பேசி வந்துள்ளார்.

இது குறித்து பல முறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. அதன் பின்னர் ஐஜியிடம் பெண் எஸ்பி நேரடியாகவே எச்சரித்துள்ளார்.

தன்னுடைய அதிகாரத்துக்கு பெண் எஸ்பி பயப்படாததால், அவரை மிரட்டத் தொடங்கியுள்ளார். எஸ்பியின் ஆண்டு அறிக்கையில் அவரைப் பற்றிய மதிப்பீட்டை குறைப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

கடந்த மாதம் 1ம் தேதி தனது அறைக்கு அழைத்த ஐஜி, பெண் எஸ்பி வந்ததும், கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

அவரை தள்ளிவிட்டு வெளியில் ஓடி வந்த எஸ்பி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மற்றும் டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பி சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

ஆனால் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் பெண் எஸ்.பி., குறிப்பிட்டுள்ளார்.

———————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *