மதுக்கடைகளை அரசு அடுத்தக்கட்டமாக எப்படி மூடப்போகிறது: உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி…

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
மதுக்கடைகளை அரசு அடுத்தக்கட்டமாக எப்படி மூடப்போகிறது: உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி…
The short URL of the present article is: http://parivu.tv/sTOgQ
Share
 • மதுக்கடைகளை அடுத்தக்கட்டமாக அரசு எப்படி மூடப்போகிறது என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்தக்கட்டமாக மூடப்போவது 500 மதுக்கடைகளா அல்லது 1000 மதுக்கடைகளா எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 • படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மதுக்கடைக்கு எதிராக போராடியவர்களை விடுவிக்கக் கோரிய வழக்கில் நீதிபதி கேள்வி விடுத்துள்ளார்.
 • நீதிபதியின் கேள்விகளுக்கு அரசிடம் கேட்டு சொல்வதாக கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் வெங்கட்ராமன் பதில் அளித்துள்ளார்.
 • ஜீன் 12ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும் சிறைத்துறை தொலைத்தொடர்பை மேம்படுத்துவது குறித்தும் பதில் அளிக்க வேண்டும என்றும் அவர் கூறியுள்ளார். 
 • எத்தனை டாஸ்மாக் கடைகள் வெவ்வேறு இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் எத்தனை டாஸ்மாக் கடைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
 • எந்தெந்த பகுதியில் மக்களின் எதிர்ப்பு இருக்கின்றது, எந்தெந்த இடங்களில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
 • அவர்களில் யார் மீதாவது தாக்குதல் நடைபெற்றதா? பொது சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டதா? என்பன போன்ற தகவல்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர்.
 • இதனையடுத்து அந்த வழக்கு இன்று மீண்டும் எடுக்கப்பட்டு, குறிப்பாக இந்த தகவல்கள் திரட்டப்பட வேண்டும், ஜூன் 12ம் தேதிக்குள் இந்த தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 • மதுக்கடைகளை அடுத்தக்கட்டமாக அரசு எப்படி மூடப்போகிறது என்றும், அடுத்தக்கட்டமாக 500 மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறீர்கள் என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
 • மேலும் மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை முழுவதுமாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் உறுதி மொழி கொடுத்திருந்தனர்.
 • ஆனால் அதிமுக அரசு தேர்தல் அறிக்கையின்போது படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தார்கள். அதன்படி என்ன செய்தீர்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர். 

——————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *