மத்திய, மாநில அரசுகள் ஒட்டு மொத்தமாக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….

By / 2 years ago / NEWS, Politics, Tamil Nadu / No Comments
மத்திய, மாநில அரசுகள் ஒட்டு மொத்தமாக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….
The short URL of the present article is: http://parivu.tv/ebMrl
Share
  • சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வேதனை குரலுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
  • தங்கள் உரிமைகளுக்காக தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 5 நாட்களாக போராடி வருவதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
  • போராடும் விவசாயிகள் மீது அக்கறை செலுத்த ஆளும் அதிமுக அரசு தயாராக இல்லை என்று குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், காவிரி நீர் கிடைக்காமல் டெல்டா மாவட்ட விளைநிலங்கள் வறண்டு கிடப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
  • தேர்தல் வாக்குறுதிப்படி அதிமுக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்யவில்லை என்றும், மாநில அரசு விவசாயிகளை ஒட்டு மொத்தமாக வஞ்சித்து வருவதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். 
  • மத்திய அரசும் தமிழகத்தின் உரிமைகளை தொடர்ந்து புறக்கணிப்பதாக தெரிவித்த ஸ்டாலின், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
  • விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

             ——————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *