மாட்டிறைச்சி தடையை எதிர்த்து ஐகோர்ட்டு கிளையில் மனு பிற்பகல் விசாரணைக்கு வருகிறது

By / 2 years ago / India, NEWS, Politics, Tamil Nadu / No Comments
மாட்டிறைச்சி தடையை எதிர்த்து ஐகோர்ட்டு கிளையில் மனு பிற்பகல் விசாரணைக்கு வருகிறது
The short URL of the present article is: http://parivu.tv/JzpD5
Share

மதுரை, 

  • மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா,  மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • இந்த நிலையில் மத்திய அரசின் மீதான உத்தரவை எதிர்த்து  மதுரையை சேர்ந்த செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
  • கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுபாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.
  • உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த மனுவை ஐகோர்ட்டு கிளை பதிவாளர் வழக்கு விசாரணை பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டார். எனவே  இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

—————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *