மீண்டும் பணிக்கு திரும்புகிறார் அருண் ஜெட்லி…

By / 4 months ago / India, NEWS, parivu / No Comments
மீண்டும் பணிக்கு திரும்புகிறார் அருண்  ஜெட்லி…
The short URL of the present article is: http://parivu.tv/9171D
Share

ஓய்வில் உள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்த மாதத்திலேயே மீண்டும் பணிகளை துவக்க உள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், நார்த் பிளாக்கில் முதல் தளத்தில் உள்ள ஜெட்லியின் அறையில் புதுப்பித்தல் மற்றும் தூய்மைபடுத்தும் பணி நடக்கிறது.

இதன் மூலம் அவருக்கு நோய் தொற்று ஏற்படுவது தடுக்கும். டாக்டர்கள் வழங்கிய ஓய்வு காலம் ஆகஸ்ட் மாத மத்தியில் முடிகிறது.

இதனால், இந்த மாத மத்தியில் ஜெட்லி பணிக்கு திரும்புவார் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தே.ஜ., கூட்டணி அரசில், மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தவரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, 65; சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

இதனையடுத்து சிறுநீரக அறுவை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

இதன் காரணமாக அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பதவி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வெடுத்து வந்தார். இருப்பினும் சமூக வலைதளங்களில், அரசின் சாதனைகள் குறித்தும், எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கும் பதிலளித்து வந்தார்.

————————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *