மும்பையில் தொடர்மழை: ரயில் சேவை பாதிப்பு

By / 2 months ago / India, NEWS, parivu / No Comments
மும்பையில் தொடர்மழை: ரயில் சேவை பாதிப்பு
The short URL of the present article is: http://parivu.tv/62reY
Share

மும்பையில் தொடர் மழை காரணமாக உள்ளூர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை நகர்ப்பகுதியில் 165.8 மி.மீ., மற்றும் புறநகர் பகுதியில் 184.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, மிகவும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை, தானே உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்றைய பொழுதும் மழையுடனே விடிந்தது.

இதனால் நல சோபரா பகுதி வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரார் முதல் சர்ச்சேட் வரை செல்லும் ரயில் சேவைகள் 15 நிமிடங்கள் வரை தாமதமாகியுள்ளன. வாசாய் முதல் விரார் வரையிலான ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மற்ற சில பகுதிகளிலும் ரயில் சேவை பாதித்துள்ளது.கனமழை காரணமாக டப்பாவாலாக்கள், தங்களது இன்று ஒரு நாள் மட்டும் தங்கள் சேவையை நிறுத்திப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மும்பை, தானே, ராய்காட் மற்றும் பல்ஹாரில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரிரு இடங்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *