மும்பையில் தொடர் மழை: பாலம் இடிந்தது

By / 2 weeks ago / India, NEWS, parivu / No Comments
மும்பையில் தொடர் மழை: பாலம் இடிந்தது
The short URL of the present article is: http://parivu.tv/hE4wP
Share

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தேரி ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.

மும்பையில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.இதனால், பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று காலையிலும் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசாக துவங்கிய மழை 8 மணிக்கு மேல் கனமழையாக மாறியது. பாரல் தாதர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பையில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் சில இடங்களில் 110 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

டோம்ப்விலி, தானே, கட்கோபர், குர்லா, சியான் மற்றும் தாதர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பல ரயில்கள் 15 நிமிடம் தாமதமாக இயங்குவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால், மத்திய ரயில்வே இதனை மறுத்துள்ளது.

இதனிடையே, அந்தேரி மேற்கு ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அந்த வழியாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *