மெட்ரோ ரயில் பெட்டிகள் உற்பத்தியை விரிவுபடுத்த சென்னை ஐ சி எஃப் முடிவு..!

The short URL of the present article is: http://parivu.tv/3rAhD
- சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கான ரயில் பெட்டிகளை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க இருப்பதாக பொது மேலாளர் மணி தெரிவித்தார்.
- இது தொடர்பாக மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்திடமும், மெட்ரோ ரயில் போக்குவரத்து அமையவுள்ள மாநிலங்களிடமும் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது கொல்கத்தா மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கான ரயில் பெட்டிகளை தயாரித்து வரும் ஐ சி எஃப் மேலும் இதை விரிவுபடுத்தி இதர நகரங்களில் அமையவுள்ள மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கும் ரயில் பெட்டிகளை தயாரித்துக் கொடுக்க தயார் ஆகி வருவதாக பொது மேலாளர் தெரிவித்தார்.
- ”எங்களிடம் கொல்கத்தா திட்டத்திற்கு 24 ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறோம். இவற்றை மார்ச் 2019 வாக்கில் முதல் தவணையை அளிக்க இருக்கிறோம்” என்றார் மணி. பல மாநிலங்கள் உ.பி உட்பட மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் துவங்கவுள்ளன.
- மேலும் தமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களான கோவை போன்றவையும் மெட்ரோ ரயில் சேவையை துவங்கவுள்ளன. இருந்தாலும் மெட்ரோ ரயில் பெட்டிகளின் தேவை எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியவில்லை,
- ஒரு ரயில் பெட்டியை தயாரிக்க ஆகும் செலவு உலகம் முழுதும் ரூ 10-11 கோடியாக இருக்கும்போது ஐ சி எஃப் அதனை 40 சதவீதம் குறைத்துக் காட்ட முயற்சிக்கிறது என்றார் தலைமைப் பொறியாளர் திரிவேதி, உள்ளூரில் கச்சாப் பொருட்களை வாங்குவதற்கு கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். மணி மேலும் கூறுகையில் அதிவேக ரயிலைத் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதன் முதல் தயாரிப்பு அடுத்த வருட மார்ச் மாதத்தில் வெளியாகும் என்றார்.
- ஸ்ரீ லங்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- தற்போதிருக்கும் ஐ சி எஃப் ரயில் பெட்டிகளை தயாரிப்பதை நிறுத்தி விட்டு ஜெர்மனின் எல் எச் பி ரயில் பெட்டிகளைத் தயாரிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
- வருடத்திற்கு 2400 ரயில் பெட்டிகளை தயாரிக்க இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறினார். கடந்த மூன்றாண்டுகளில் ரூ 1000 கோடி மூலதனத்தில் இத்தொழிற்சாலை நவீனப்படுத்தப்பட்டிருப்பதாக திரிவேதி தெரிவித்தார். இதன் மூலம் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று அவர் விளக்கினார்.
——————————————————————————————————————————————————
24 ????? ????????? ????????? ?????????.chennaimetro rail
Leave a comment