மோடி மவுனமாக இருப்பது ஏன் ? ராகுல் கேள்வி…

By / 2 weeks ago / India, NEWS / No Comments
மோடி மவுனமாக இருப்பது ஏன் ? ராகுல் கேள்வி…
The short URL of the present article is: http://parivu.tv/VCfEp
Share

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரபேல் விமானம் வாங்கப்பட்டது, மற்றும் மக்களின் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க மறுப்பது ஏன் என டில்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்தில் காங்., தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ராகுல் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுகளில் இது போன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது இல்லை. ஆனால் இந்த விலை உயர்வு குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருந்து வருகிறார்.

இது வரை இல்லாத அளவிற்கு பண மதிப்பு குறைந்துள்ளது. பிரதமர் மோடி இது வரை கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

மத்திய அரசு ஏழகைளை மறந்து பணக்காரர்களுக்கே சலுகை செய்கிறது. ரபேல் விமானம் வாங்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர் வாய் திறக்க மறுக்கிறார்.

பண மதிப்பிழப்பு காரணமாக கறுப்பு பணத்தை பலரும் வெள்ளையாக மாற்றினர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்.

இன்றைய பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த எதிர்கட்சியினருக்கு நன்றி. வரும் காலத்தில் எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு மோடி அரசை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

மன்மோகன் ஆரூடம்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில்; மத்திய அரசு பல செய்திருக்கிறது. ஆனால் நாட்டு மக்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றார்.

——————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *