ரபேல் போர் விமான கொள்முதலில் ஒளிவுமறைவு ஏன்? பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி…

By / 3 weeks ago / India, NEWS, Police, Tamil Nadu / No Comments
ரபேல் போர் விமான கொள்முதலில் ஒளிவுமறைவு ஏன்? பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி…
The short URL of the present article is: http://parivu.tv/nnq1z
Share

ரபேல் போர்விமானங்களின் தேவை அதிகமாக இருந்த போது குறைவான விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

ரபேல் எனப்படும் போர்விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்முதல் செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா அரசுக்கு பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியுள்ளது. போர் விமானங்கள் தேவை 126 தேவைப்பட்ட நிலையில் 36க்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஒரு விமானத்திற்கு ரூ.526 கோடிக்கு பதிலாக ரூ.1670 கோடி கொடுப்பது ஏன் என்றும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கொள்முதல் நியாயமாக நடந்தது எனில் கூட்டுக்குழு விசாரணைக்கு எதிர்ப்பு ஏன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

———————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *