வடமாநிலங்களில் வன்முறையாக மாறிய பந்த்…

By / 2 months ago / India / No Comments
வடமாநிலங்களில் வன்முறையாக மாறிய பந்த்…
The short URL of the present article is: http://parivu.tv/LgBEY
Share

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால் பஸ்கள் நிறுத்தப்பட்டும், கடைகள் அடைக்கப்பட்டும் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்நிலையில் பந்த் காரணமாக பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்துள்ளனர்.

பீகாரில் ஜன் அதிகர் கட்சியை சேர்ந்தவர்கள் பந்த்தின் போது இயக்கப்பட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் பல கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா அமைப்பினர் திறக்கப்பட்ட கடைகளை மிரட்டி மூடச் செய்தனர். மூட மறுத்த கடைகளை அடித்து நொறுக்கினர்.

இதே போன்று ம.பி.,யின் உஜ்ஜயின் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பங்க்கை அடித்து நொறுக்கி உள்ளனர்.

———————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *