வட இந்தியாவில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. இதுவரை 10 பேர் உயிரிழப்பு…

By / 2 years ago / India, NEWS / No Comments
வட இந்தியாவில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. இதுவரை 10 பேர் உயிரிழப்பு…
The short URL of the present article is: http://parivu.tv/c5BeT
Share
  • சிம்லாவில் கடும் குளிருக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் சாலைகள் முழுவதும் பனி படர்ந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
  • பல இடங்களில் கட்டடங்களும், வாகனங்களும் வெண்ணிற போர்வை போர்த்தியதுபோல பனி படர்ந்து காணப்பட்டது. தட்பவெப்ப நிலை குறைந்துள்ளதால் கடும் குளிர் மக்‍களை வாட்டுகிறது. இதனால் பொதுமக்‍களின் நடமாட்டமும் மிகவும் குறைந்து காணப்பட்டது.
  • கடும் குளிர் காரணமாக சிம்லாவில் மட்டும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *