வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்.

By / 2 months ago / India, NEWS, parivu / No Comments
வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்.
The short URL of the present article is: http://parivu.tv/Dv0IB
Share

வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உள்ளது.

வரதட்சணைக் கொடுமைப் புகார் அளிக்கப்பட்டால், அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த பின்னரே குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் தீவிரத் தன்மையைக் குறைப்பதாக கூறி, மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவை திருத்தி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, வரதட்சணைப் புகார்களில் உடனடியாக கைது செய்யத் தடையில்லை என்றும், அதே நேரத்தில் உரிய நீதிமன்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்கலாம் என்றும் நீதிபதிகள் அதில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உள்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *