வரம்பு மீறி பேசுகிறார் நடிகர் கமலஹாசன் : தமிழிசை கொந்தளிப்பு

By / 1 month ago / India, NEWS, parivu, Politics / No Comments
வரம்பு மீறி பேசுகிறார் நடிகர் கமலஹாசன் : தமிழிசை கொந்தளிப்பு
The short URL of the present article is: http://parivu.tv/LNIv8
Share

வரம்பு மீறி பேசுகிறார் நடிகர் கமலஹாசன் : தமிழிசை கொந்தளிப்பு

சென்னை: அரசியல் அனுபவம் இல்லாத கமல்ஹாசன், பாஜவை விமர்சிப்பது வரம்புமீறிய பேச்சு என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறது. அதோடு மத்தியிலும் ஆளும் பொறுப்பில் இருக்கிறது. அப்படிப்பட்ட கட்சியை பார்த்து நடிகர் கமல்ஹாசன், பாஜவை டார்ச்லைட் அடித்துதான் தேடி கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறியிருக்கிறார். கட்சியில் சில நேரங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். அதற்காக பாஜவை டார்ச் அடித்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் பேசியிருப்பது வரம்பு மீறிய பேச்சு. நேற்று அரசியலுக்கு வந்தவர் கமல்ஹாசன். அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லாத நிலையில் வரம்பு மீறி பேசுகிறார்.

மதுரையில் சித்திரைத் திருவிழா நாளில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது அங்கு தேர்தல் நடப்பதில் இடையூறாகத்தான் இருக்கும். மதுரை சித்திரை திருவிழா என்பது மிகவும் பிரமாண்டமான திருவிழா. தமிழ்நாட்டின் தென் பகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் நேரம். இந்த நேரத்தில் அங்கு தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது. இதை தேர்தல் ஆணையம் முன்னதாகவே கணக்கில் எடுத்திருக்க வேண்டும். இதை பரிசீலித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுபோல, ஆன்மிக விழாவுக்கும் இடையூறு ஏற்படக்கூடாது. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி வைப்பதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

————————————————————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *