வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
The short URL of the present article is: http://parivu.tv/0eQCX
Share
 • வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 • தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 2) பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று (புதன்கிழமை) அமைச்சர் சந்தித்தார்.
 • அப்போது அவர், நாளை பிளஸ் 2 தேர்வை எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
 • "போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பிருக்கிறதே" என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
 • அதற்கு பதிலளித்து அமைச்சர், "தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும். கல்வியில் தமிழகம் முதலிடத்தில் திகழ நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
 • மேலும் அவர் கூறும்போது, "பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேற்படிப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற அரசு சார்பில் இலவச ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
 • தனியாருடன் இணைந்து மாணவர்களுக்கு மருத்துவ, பொறியியல் படிப்புக்கான பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
 • அதேபோல், ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை குறித்து ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 • முன்னதாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 12-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மே 19-ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.
 • பொதுத்தேர்வுகள் தொடங்குவ தற்கு முன்பாகவே தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படுவது அரசு தேர்வுத்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 • இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கு முந்தைய நாளான இன்று மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு பாடத்திட்டம் மாற்றம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *