விளைவுகள் மோசமாக இருக்கும் : பா.ஜ.,வுக்கு மெகபூபா எச்சரிக்கை

காஷ்மீரில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) க்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் பா.ஜ., விலக்கிக் கொண்டது. இதனால் மெகபூபா ஆட்சி கவிழ்ந்தது. தற்போது காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ளது.
இதற்கிடையில் பிடிபி.,யை சேர்ந்த சில அதிருப்தி எம்எல்ஏ.,க்களை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சித்து வருகிறது. இதனால் பிடிபி., க்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு கடும் எச்சரிக்கையும், மிரட்டலும் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பிடிபி.,யை உடைக்க டில்லி முயற்சித்தால், காஷ்மீரில் பிரச்னை மட்டும் தான் பெரிதாகும். சலாஹூதீன், யாசின் மாலிக் போன்ற ஏராளமான பிரிவினைவாதிகள் பிறந்து வருவார்கள். 1987 ஐ போன்று மக்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை மறுக்க டில்லி முயற்சித்தால், அது பிரிவினைகளையும், தலையீடுகளையும் தான் உருவாக்கும்.
நானும் சலாஹூதீன், யாசின் மாலிக் போன்றே சிந்திக்க வேண்டி இருக்கும். அவர்கள் பிடிபி.,யை உடைக்க முயற்சித்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அதனை எதிர்கொள்ள டில்லி தயாராகிக் கொள்ளட்டும் என எச்சரித்துள்ளார்.
?????? ??????? ??????????????????? ?????? ????????? : ??.?.
Leave a comment