விவசாய கடன் ரத்து செய்யப்படுவது நேர்மையான கடன் கொள்கைக்கு எதிரானது என இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் கருத்து

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
விவசாய கடன் ரத்து செய்யப்படுவது நேர்மையான கடன் கொள்கைக்கு எதிரானது என இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் கருத்து
The short URL of the present article is: http://parivu.tv/9bbzX
Share
  • விவசாய கடன் ரத்து செய்யப்படுவது நேர்மையான கடன் கொள்கைக்கு எதிரானது என இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்.
  • விவசாய கடன் ரத்து செய்வது முறையாக வரி செலுத்துவோரின் பணம் விரயமாக்கப்படவதற்கு சமமானது என்றும் கூறியுள்ளார்.
  • மேலும் இது முறையான கடன் கொள்கையை சீர்குலைத்து விடும் என்றும் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறுகிய கால கடன் வட்டி 6.25 சதவீதம் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்தார். 
  • சர்வதேச அளவில் ஒப்பிடும் போது அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக தெரிவித்த அவர், இதனால் நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
  • நடப்பு நிதியாணடில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்றார். 2017 – 18 முதல் அரையாண்டில் பணவீக்க விகிதம் 4.5 சதவீதமாகவும், இரண்டாவது அரையாண்டில் 5 சதவீதமாகவும் இருக்கும் என்றார்.
  • விவசாய கடன் தள்ளுபடி குறித்து கருத்து தெரிவித்த அவர், இது கடன் வழங்கும் ஒழுங்கு முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
  • நேர்மையான முறையில் கடன் பெறுவதையும் விவசாய கடன் தள்ளுபடி பாதிக்கும் என்றார். 2016 – 17-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் வாராக்கடன் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

—————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *