வீடியோவை சமர்ப்பித்தது – இந்தியா- மல்லையாவுக்கு சிறையில் வசதிகள்

By / 3 months ago / India, NEWS, parivu / No Comments
வீடியோவை சமர்ப்பித்தது – இந்தியா- மல்லையாவுக்கு சிறையில் வசதிகள்
The short URL of the present article is: http://parivu.tv/F5Mti
Share

பண மோசடி வழக்கில் தப்பியோடிய பிரபல தொழிலபதிபர் விஜய் மல்லையாவுக்கு, மும்பை ஆர்த்தர் சாலையில் வழங்கப்பட உள்ள வசதிகள் குறித்த, எட்டு நிமிடங்கள் அடங்கிய, ‘வீடியோ’வை, லண்டன் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி, 9,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாமீது வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, 2016 மார்ச் மாதம், பிரிட்டன் நாட்டின் லண்டன் நகருக்கு தப்பியோடினார். வழக்குகள் விசாரணைக்காக அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

லண்டனில் உள்ள நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. ‘நாடு கடத்தப்பட்டால், மல்லையா, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார்’ என, மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், ‘அந்த சிறையில், போதிய வசதிகள் இல்லை’ என்று மல்லையா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறையில் உள்ள வசதிகள் குறித்த தகவல்களை தாக்கல் செய்யும்படி, லண்டன் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மல்லையாவை அடைக்க திட்டமிட்டுள்ள, பாதுகாப்பு அதிகம் உள்ள, 12ம் எண் சிறை வளாகத்தில் உள்ள வசதிகள் குறித்த, எட்டு நிமிட வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ, லண்டன் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை, செப்., 12ல் மீண்டும் நடக்க உள்ளது.

——————————————————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *