1 வாரத்திற்குள் பேரவையை கூட்டி பலப்பரீட்சை நடத்த தமிழக ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் பரிந்துரை…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
1 வாரத்திற்குள் பேரவையை கூட்டி பலப்பரீட்சை நடத்த தமிழக ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் பரிந்துரை…
The short URL of the present article is: http://parivu.tv/ba5pa
Share
  • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
  • இந்நி்லையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி யோசனை தெரிவித்துள்ளார்.
  • ஓ.பன்னீர்செல்வம் – சசிகலா இருவருக்கிடையே உச்சகட்ட மோதல் நடைபெற்று வருகிறது. இருவரிடையே யார் முதல்வர் பதவியை பெறுவது என கடும் போட்டி நிலவுகிறது.
  • சசிகலா தரப்போ கூவத்தூரில் கொண்டு போய் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து, எப்படியாவது அதிருப்தி உறுப்பினர்கள் பன்னீர் பக்கம் சென்றுவிடாதவாறு பல அரண்கள் அமைத்து தடுத்து வருகிறது. 
  • ஓ.பன்னீர்செல்வம் எப்போது பேசினாலும் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை கண்டிப்பாக நிரூபிப்பேன் என்றே உறுதிபட தெரிவித்து வருகிறார்.
  • இந்நிலையில் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள்,  அதிமுக அடிமட்ட தொண்டர்கள், மக்கள் என பல்வேறு தரப்பினரின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வம் பக்கமே இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.
  • இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசியல் சூழலில் என்ன மாதிரியான முடிவை எடுக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.
  • அப்போது 1 வாரத்திற்குள் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி பன்னீர்செல்வம் – சசிகலா இருவரையும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம் என பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

—————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *