10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரே நாளில் ரிலீசாகும் ஒரே நடிகரின் இருபடங்கள்…

By / 2 years ago / Games, NEWS, Tamil Nadu / No Comments
10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரே நாளில் ரிலீசாகும் ஒரே நடிகரின் இருபடங்கள்…
The short URL of the present article is: http://parivu.tv/xh8oN
Share
  • லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள `சிவலிங்கா’, `மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களை பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
  • சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.  இப்படத்தை பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், பி.வாசு இயக்கத்தில் ராகவா  லாரன்ஸ் நடித்ததுள்ள மற்றொரு படமான `சிவலிங்கா’ படத்தையும் பிப்ரவரி 17-ம் தேதியே வெளியிடப்போவதாக  அப்படக்குழுவினர்அறிவித்துள்ளனர்.
  • பொதுவாக ஒரு நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இதற்கு முன்னதாக 1998-ல்  கார்த்திக்கின் `உள்ளத்தை அள்ளி தா’, `கிழக்கு மலை’ ஆகிய இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசாகியது. பின்னர் சமீபத்தில் பரத்  நடிப்பில் `வெயில்’, `சென்னை காதல்’ ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகியுள்ளது.
  • இவ்வாறு ஒரே நாளில் ரிலீசாகும் படங்களில் ஒரு படம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்ற வரலாறு இருக்கும் நிலையில், இவ்விரு  படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இருப்பினும்   கடைசி நேரத்தில் இந்த இருபடங்களில் ஏதாவது ஒரு படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *