12வது நாளாக விவசாயிகள் போராட்டம்:ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்…

The short URL of the present article is: http://parivu.tv/f1Zsj
- ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு தமிழக விவசாயிகள் மீது கொண்டுள்ள விரோதபோக்கினை கைவிட வலியுறுத்தி டெல்லியில் 12வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் 12வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- இவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
- முதலாவதாக மரத்தில் ஏறி தூக்குப்போடுவது, பிச்சைஎடுப்பது, தெருவில் படுத்து புரள்வது, மொட்டையடிப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
- இந்நிலையில் நேற்றைய தினம் தமிழக நடிகர்களான விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் ஆகியோர் டெல்லியில் வந்து இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
- பல்வேறு விதமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் வந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.
- கடந்த வாரத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை சந்தித்து இவர்கள் கோரிக்கை வைத்த போதிலும் இவர்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
- ஏன்னென்றால் இவர்கள் தமிழகத்தில் சுமார் 39000 கோடி ரூபாய் அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கான வறட்சி நிதியை அப்படியே தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
- ஆனால் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ள மத்திய அரசு வெறும் ரூ.1748 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
- இது தமிழகத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவின் அறிக்கை கூட கிடையாது. மத்திய குழுவிற்கு உதவியாக வந்த சப்-கமிட்டி குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையாகும்.
- இந்த தொகையை எவ்வாறு 32 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்க முடியும். எனவே எங்களுக்கு இந்த தொகை போதாது, கூடுதலாக வழங்க வேண்டும்.
- நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை எங்கள் உரிமையை தான் கேட்கிறோம் என்று தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
————————————————————————————————————————————————————————
12th Day of Peasant Struggle????????? ????? ????? ????????hydrocarbon
Leave a comment