2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது அசாம் மாநிலத்தில் புதிய சட்டம்..!

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது அசாம் மாநிலத்தில் புதிய சட்டம்..!
The short URL of the present article is: http://parivu.tv/lKZNz
Share
  • அசாமில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்காக புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மக்கள்தொகை கொள்கை வரைவை அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ளார். 
  • 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கும், சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அரசு வேலையில் இருப்பதற்கான தகுதி கிடையாது.
  • டிராக்டர் பெறுதல், அரசு வீடு பெறுதல் உள்ளிட்ட வேலைவாய்ப்பிற்கான அரசு நலத்திட்டங்களை பெறவும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதி பொருந்தும். 
  • உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கும் இந்த விதியை கட்டாயமாக்க மாநில தேர்தல் கமிஷனிடம் கேட்கப்பட்டுள்ளது.
  • அனைத்து பெண்களுக்கும் பல்கலை., வரையில் இலவச கல்வி வழங்கப்படும். இதில் போக்குவரத்து, புத்தகங்கள், விடுதி உள்ளிட்ட செலவினங்களும் அடங்கும். இதனால் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம் தடுக்கப்படும்.
  • பெண்களுக்கு அரசு பணி மற்றும் தேர்தலில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  • முதியோர், பெண்கள், ஆதரவற்றோரை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள், மத தலைவர்கள், என்ஜிஓ.,க்கள், எம்.பி.,க்கள், மீடியாக்கள் மூலம் விழிப்புணர்வு கொண்டு வரப்படும்.
  • இந்த கொள்கை வரைவு மீது ஜூலை மாதம் வரை மக்களின் கருத்து கேட்கப்பட உள்ளது. அதன் பிறகு நடக்கும் சட்டசபை கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் நடத்தப்படும்.
  • அதனைத் தொடர்ந்து இந்த புதிய கொள்கை தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

——————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *