ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு …

By / 2 years ago / NEWS, Politics, Tamil Nadu / No Comments
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு …
The short URL of the present article is: http://parivu.tv/neEXo
Share
  • ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், ஜல்லிக்கட்டுக்குத் தடையாக உள்ள பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.
  • இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர் நல அமைப்புகள், விவசாய சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் 20-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்தன.
  • இதைத் தொடர்ந்து தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்குகிறது. இதனால் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது. தமிழகத்தில் 10 லட்சம் வாகனங்கள் ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

—————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *