89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

By / 2 years ago / India, World / No Comments
89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
The short URL of the present article is: http://parivu.tv/0fNU9
Share
 • 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
 • 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
 • லா லா லேண்ட் திரைப்படம் 14 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 • தற்போது வரை லா லா லேண்ட் திரைப்படத்திற்கு 4 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மஹெர்ஷாலா அலிக்கு வழங்கப்படுகிறது.
 • மூன்லைட் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்கப்படுகிறது.
 • சிறந்த ஒப்பனைக்கான விருது 'சூசைட் ஸ்குவேட்' படத்தில் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • அலேஸ்சாண்ட்ரோ, கிறிஸ்தோபர் நெல்சன் ஜியார்ஜியோவுக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது வழங்கப்பட்டது. 
 • சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது 'பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' திரைப்படத்துக்கு வழங்கப்படுகிறது.
 • 'பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' திரைப்படத்தில் பணியாற்றிய கோலீன் அட்வூடுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
 • சிறந்த ஒலி அமைப்புக்கான ஆஸ்கர் விருது அரைவல் திபை்படத்திற்கு வழங்கப்பட்டது.
 • ஹாக்ஸா ரிட்ஸ் திபை்படத்திற்காக சிறந்த ஒலி கலவைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
 • ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 1960 முதல் திரைப்படத்தில் நடித்து வருவதையடுத்து ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 
 • சிறந்த ஆவணப்படத்திற்கான விருது ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வயோலா டேவிஸ்க்கு வழங்கப்பட்டது.
 • ஃபென்சஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக வயோலா டேவிஸ்க்கு விருது வழங்கப்பட்டது.
 • சேல்ஸ் மேன் திரைப்படத்திற்கு சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
 • விழாவில் சேல்ஸ் மேன் திரைப்பட இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாரி பங்கேற்கவில்லை.
 • ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா தடை விதித்ததால் ஆஸ்கர் விருதை புறக்கணித்தார். 
 • சிறந்த அனிமேசன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது பைபர்க்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த அனிமேசன் திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருது ஸூடோபியா படத்திற்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது லா லா லேண்ட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. 
 • சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருது தி ஜங்கிள் புக் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருது ஹாக்ஸா ரிட்ஸ் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *