admin

மேட்டூர் அணையில் ஆய்வு

13 hours ago / 0 comments

Share

மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி நாளை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செம்மலை, கலெக்டர் ரோகினி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அணையை நேரில் ஆய்வு செய்தனர்.

இந்து மதத்தில் அடிப்படை வாத முயற்சி: சசி குற்றச்சாட்டு

13 hours ago / 0 comments

Share

பாஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா , இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என காங்., எம்.பி., சசிதரூர் சமீபத்தில் கூறியதற்கு, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை கூறிய சசிகதரூர், திருவனந்தபரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது …

முதல்வர் ராஜினாமா செய்யனும்: ஸ்டாலின்

13 hours ago / 0 comments

Share

லண்டன் சென்று விட்டு திரும்பிய திமுக செயல் தலைவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.100 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் மவுனம் காப்பது ஏன்? மவுனம் சம்மதம் என்று …

ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு

14 hours ago / 0 comments

Share

சென்னை சாஸ்திரிபவன் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், மிகவும் சத்தமாக ஒலிப்பெருக்கி வைத்ததாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தி இடையூறு ஏற்படுத்தியதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர்கள் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடியுடன் மழை வாய்ப்பு:வானிலை மையம்

1 day ago / 0 comments

Share

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்!

1 day ago / 0 comments

Share

எனக்கு ஏராளமான வேலைகள் உள்ளன. ஒரு நாளைக்கு, 24 மணி நேரம், எனக்கு போதவில்லை…’ என, பலர் கூறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி. ஒரு நாளைக்கு, 24 மணி நேரம் என்பது, விரைவில், 25 மணி நேரமாகப் போகிறதாம். அமெரிக்காவில் உள்ள, விஸ்கான்சின் – …

லோக்பால் அமைக்கும் பணியை விரைவுபடுத்த உத்தரவு

2 days ago / 0 comments

Share

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் தேர்வு குழு கூடி லோக்பால் நியமன முடிவுகளை எடுக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் காப்பகங்களில் சோதனை: மத்திய அரசு உத்தரவு

2 days ago / 0 comments

Share

மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை செய்ய அனைத்து மாநில அரசுளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு …

கட்டுமான நிறுவனத்தில் ரூ.163 கோடி பறிமுதல்

2 days ago / 0 comments

Share

தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை, எஸ்.பி.கே., என்ற, கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 2வது நாளாக நடந்தது. சென்னை பெசன்ட் நகர், மயிலாப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். …

நீட் தேர்விற்கு 412 மையம்: அமைச்சர்

2 days ago / 0 comments

Share

அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: அனைத்து மாவட்ட நுாலகங்களிலும் ஐ.ஏ.எஸ்., அகாடமி செயல்பட இரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4622 நுாலகங்களில் 314 முழுமையாக …