Category : India

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்…

1 week ago / 0 comments

Share

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார். இதனால் நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கு : வேதாந்தா குழுமத்துக்கு நோட்டீஸ்…

1 week ago / 0 comments

Share

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரூ.750 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் வேதாந்தா குழுமத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த விஜய் நிவாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் குழுமம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மேலும் வேதாந்தா நிறுவன …

அதிமுக.வில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கம்…

1 week ago / 0 comments

Share

அதிமுக.வில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி சின்னசாமி செயல்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை, சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக இருந்தவர் …

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்…

1 week ago / 0 comments

Share

லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று (ஆக.,13) காலை கோல்கட்டாவில் காலமானார். அவருக்கு வயது, 89. சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆக.,8 ம் தேதி அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் செயற்கை சுவாச உதவியுடன் …

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் மம்தா: அமித்ஷா…

1 week ago / 0 comments

Share

மேற்கு வங்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை முதல்வர் மம்தா பானர்ஜி பாதுகாத்து வருவதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். தேசமே முக்கியம் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலை திரிணமுல் எதிர்த்து வருகிறது. ஆனால், சட்டவிரோதமாக …

திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அரசாணை வெளியீடு…

1 week ago / 0 comments

Share

திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி கடந்த சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று …

மேட்டூர் அணையின் நீர்திறப்பு 60,000 கனஅடியாக அதிகரிப்பு…

1 week ago / 0 comments

Share

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை கடந்த 8ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த உபரி நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று …

எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த பிரதமர் இலக்கு…

2 weeks ago / 0 comments

Share

உயிர் எரிபொருள் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கூடுதல் வருமானம் உலக உயிரி தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், உயிர் எரிபொருளானது, கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும். சுத்தமான …

ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது : க.அன்பழகன் அறிவிப்பு…

2 weeks ago / 0 comments

Share

திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெறும் …

கர்நாடக அணைகளில் இருந்து 1.43 லட்சம் கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணை மீண்டும் நிரம்புகிறது…

2 weeks ago / 0 comments

Share

கர்நாடக அணையிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.6 லட்சம் கன அடியாக திறப்பிக்கப்ட்ட தண்ணீர் எல்லையை வந்தடைந்தது. ஒகேனக்கலில் தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்வரத்து படிப்படியாக மாலைக்குள் இருமடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கலில் …