சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்... பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 .. புதுவை பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!

சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்... பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 .. புதுவை பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!
By: TeamParivu Posted On: March 13, 2023 View: 52

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். 

புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செயதுள்ளார் .முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய சில அறிவிப்புகள் பின்வருமாறு,

*புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

*தமிழ்வளர்ச்சி,ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.

*பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும்.

*புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும்.

*கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து  அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும்;

*மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*அட்டவணை இனப்பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

*புதுச்சேரியில் 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

*சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும்.

*மீனவர் உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500-ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*மின்துறைக்கு ரூ.1,946 கோடியும், மின் சிக்கனத்தை கடைபிடிக்க ரூ. 4.6 கோடியில் எல்இடி தெருவிளக்குகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:
#புதுவைபட்ஜெட்  # புதுவை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..