16.jpeg)
அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடியில் கட்டப்பட்டுள்ள அனிதா நினைவு அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
நீட் எனும் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், அரியலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள அனிதா நினைவு அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையையேற்று, அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடியில் கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு தங்கை அனிதா பெயரை சூட்டுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், அரியலூரில் இன்று அனிதா நினைவு அரங்கத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டோம் எனப் பதிவிட்டுள்ளார்.
Tags:
#அனிதாநினைவுஅரங்கு
# உதயநிதிஸ்டாலின்