_(15).jpeg)
ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பணம் செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் குறியீடுகள் அகற்றபப்டும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அந்த வெரிஃபைடு ப்ளூ டிக் தொடர்ந்து வேண்டுமானால் பயனாளர்கள் சந்தாதாரர்களாக மாற வேண்டும்” எனவும் ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இனி உறுதிப்படுத்தபட்ட ப்ளூ டிக் சேவை வேண்டும் என்றால் ட்விட்டர் பயனாளர்கள் மாதம் கட்டணம் செலுத்தி ட்விட்டர் ப்ளூ சேவையை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் ப்ளூ டிக் குறியீடுகளை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ப்ளூ டிக்கிற்கான சந்தா திட்டத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:
#ட்விட்டர்
# ப்ளூடிக்