தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு டிச.15ம் தேதி எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு டிச.15ம் தேதி எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...!!
By: TeamParivu Posted On: December 07, 2022 View: 51

தமிழ்நாட்டில் 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்த மாநில அளவில் 3-ம் பருவத்துக்கான மாநில மாவட்ட அளவிலான பயிற்சி ஆசிரியர்களுக்கு நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம், கணிதப் படங்களுக்கு மாநில அளவிலான முதன்மை எழுத்தாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் தொடங்கப்படவுள்ளது.

மதுரை மாவட்டத்தில் டிசம்பர்.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்கள் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.  மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த தமிழ், கணிதம், ஆங்கிலத்துக்கான பயிற்சி டிசம்பர்.19,20,21 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளனர். அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமான, ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு வாசித்தல் திறனும், எழுதும் திறனும் குறைந்துள்ளது. எனவே, இதை போக்கும் நோக்கில், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணிதத் திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும் , எண்ணும் எழுத்தும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 8 வயதுள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறனுடையவர்களாக மாற்றுவதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில், அரும்பு, மொட்டு, மலர் என மூன்று படிநிலைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அரும்பு படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். மொட்டுக்கள் என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்களை மாணவர்கள் வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். மலர் என்கிற படிநிலையில் சரளமாக வாக்கியங்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

இதனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ( Hi - Tech ) ஆய்வகங்கள் மூலம் இணைய வழி பயிற்சி நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளனர்.

Tags:
#எண்ணும்எழுத்தும்  # பயிற்சி  # பள்ளிக்கல்வித்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..