தமிழ்நாட்டில் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!!
By: TeamParivu Posted On: January 18, 2023 View: 56

தமிழ்நாட்டில் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:
#தற்காலிகஆசிரியர்  # பள்ளிக்கல்வித்துறை  # பணிகாலம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..