10.jpeg)
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ள நிலையில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் சிபிஎஸ்இ-யால் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடங்களில் கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வுகள் 2 கட்டமாக நடத்தப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஒரே கட்டமாக நடத்தப்பட முடிவானது.
அதன்படி, 2022-2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ மாணவிகளிடம் நிலவி வந்த நிலையில், கடந்த மாதம் தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு சிபிஎஸ்இ தேர்வாணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.. சிபிஎஸ்இ 10ம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும் என்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.. இதையொட்டி மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன... அதன்படி CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. 10ம் வகுப்புகளுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வு இன்றைய தினம் தொடங்குகிறது... 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பாடத்தேர்வு இன்று நடக்க உள்ளது.
சில தேர்வுகள் 1.30 மணி வரை நடத்தப்படும் என்றும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மேற்கண்ட விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்றும் CBSE தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பொதுத்தேர்வுகளை எழுத மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர். அதேபோல, 'சாட்-ஜிபிடி' என்ற ஆப் உட்பட பிற எலக்ட்ரானிக் கருவிகள் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Tags:
#சிபிஎஸ்இ
# பொதுத்தேர்வு
# மாணவர்கள்