
முகப்பேரை சேர்ந்தவர் தொழிலதிபர் கணேசன் (47). இவர், திருமங்கலத்திலிருந்து, அண்ணாநகரில் உள்ள உறவினர் அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா வீட்டிற்கு சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தார்.
இதையடுத்து, ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காருக்குள் மாட்டிக்கொண்ட கணேசனை பல மணி நேரம் போராடி 60 சதவீத தீக்காயத்துடன் மீட்டனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:
#சென்னை
# தீவிபத்து
# சொகுசு கார்
# அரசு மருத்துவமனை